Monday, 31 December 2012

கும்கி- கதை


நடிகர் : விக்ரம் பிரபு
நடிகை : லட்சுமி மேனன்
இயக்குனர் : பிரபு சாலமன்
இசை : டி.இமான்
ஓளிப்பதிவு : சுகுமார்
கும்கி யானையை வைத்து பிழைக்கும் ஏழை இளைஞனை சுற்றி பின்னப்பட்ட ஜீவனுள்ள கதை...  

கேரள எல்லையில் வசிப்பவன் பொம்மன். சிறு வயதில் இருந்தே தன்னுடன் வளர்ந்த மாணிக்கம் என்ற யானையே அவன் உலகம். திருமணங்கள், கோவில்களுக்கு யானையை கொண்டு போய் சம்பாதித்து தனது வாழ்வை நகர்த்துகிறான்.

மலைக்கிராமத்தில் வசிக்கும் பழங்குடி மக்களை கொம்பன் என்ற காட்டு யானை கொன்று அழிக்கிறது. அவர்கள் பயிர்களையும் நாசம் செய்கிறது. வனத்துறையினர் வீடுகளை காலி செய்யும்படி நிர்ப்பந்திக்கின்றனர். முன்னோர் வாழ்ந்த இடத்தை விட்டு வெளியேற அவர்கள் மறுக்கின்றனர்.

காட்டு யானையை விரட்ட பழக்கப்பட்ட கும்கி யானையை கிராம மக்களே பணம் கொடுத்து வரவழைக்கின்றனர். பேசியபடி கும்கி யானையை வைத்திருப்பவனால் வர முடியவில்லை. அவன் வருவதுவரை பழங்குடி மக்களை ஏமாற்ற பொம்மன் யானையுடன் செல்கிறான்.

பழங்குடியினர் தங்களை காக்க வந்த தெய்வம் என்று பொம்மனையும், போலி ‘கும்கி’ யானையையும் கொண்டாடுகிறார்கள். பழங்குடியின தலைவனின் மகள் அல்லியின் அழகு பொம்மனை கிறங்க வைக்கிறது. அவளை பார்த்தவுடனேயே காதலில் வீழ்கிறான்.

ஒரிஜினல் ‘கும்கி’ யானையை வரவிடாமல் தடுத்து அல்லிக்காக அங்கேயே தங்குகிறான் பொம்மன். அல்லியும் அவனது காதலை ஏற்கிறாள். அவளுக்கு பெற்றோர் தங்கள் இனத்திலேயே மாப்பிள்ளை பார்க்கின்றனர். அப்போது காட்டு யானை கொம்பன் கிராமத்துக்குள் இறங்குகிறது.

அதன்பிறகு நடப்பவை உயிரை உருக்கும் கிளைமாக்ஸ்...

வித்தியாசமான கதை களத்தில் காட்சிகளை உயரோட்டமாக நகர்த்துகிறார் இயக்குனர் பிரபு சாலமன். பொம்மன் கேரக்டரில் விக்ரம் பிரபு வாழ்ந்திருக்கிறார். இவர் நடிகர் பிரபுவின் மகன். முதல் படத்திலேயே கனத்த கதைக்குள் கச்சிதமாய் பொருந்தி செஞ்சுரி அடிக்கிறார்.

தாய் மாமன் தூண்டுதலால் திருடிய யானையிடம் கோபிப்பது, வனத் துறையிடம் மன்றாடி யானையை மீட்பது என அழுத்தமான பதிவுகளாக மனதை நீங்காமல் இருக்கிறார். அல்லியுடன் காதல் வயப்படுவது கவித்துவம்...

பழங்குடியினர் தன் மீது வைத்துள்ள நம்பிக்கையில் நெகிழ்ந்து காதலை உதறிவிட முடிவெடுத்து தனது மாமனிடம் பேசும் வசனங்களில் விழிகளில் நீர்முட்ட வைக்கிறார். கிளைமாக்சில் முதிர்ச்சியான நடிப்பில் முத்திரை பதிக்கிறார்.

அல்லியாக வரும் லட்சுமி மேனன் வனதேவதையாய் பளிச்சிடுகிறார். காட்டு யானையின் வெறியாட்டத்தில் தப்புவது திகில்... இன பழக்கத்தை மீற முடியாமலும், காதலை உதற முடியாமலும் தவித்து மனதில் கிறங்குகிறார்.

விக்ரம்பிரபுவின் தாய் மாமனாக வரும் தம்பி ராமையா கலகலப்பூட்டுகிறார். போலி கும்கி யானையை பழங்குடியினர் கண்டுபிடித்து விடுவார்களோ என உயிர் பயத்தில் இவர் நடுங்கும் சீன்கள் ரகளை. படம் முழுக்க ஒரே மாதிரியே பேசி திரிவது சலிப்பு.

விக்ரம் பிரபுவின் உதவியாளராக உண்டியல் கேரக்டரில் வரும் அஸ்வின் சிரிக்க வைக்கிறார். பழங்குடியின தலைவராக வரும் ஜோய்மல்லூரி நேர்த்தி. காட்சிகளில் திருப்பங்கள், சஸ்பென்ஸ் வைத்து இருந்தால் இன்னும் பேசப்பட்டு இருக்கும்.

இதையும் மீறி பழங்குடியினரின் வாழ்வியலும் மலையோர அழகியலும், காதலும் மனதை கட்டிப்போடுகிறது. இமான் இசையில் பாடல்கள் வருடுகின்றன. சுகுமாரின் கேமரா காட்டின் பசுமையை கண்களில் பதிக்கிறது.

Saturday, 22 December 2012

நீதானே என் பொன்வசந்தம்-சினிமா விமர்சனம்.


2-ம் வகுப்பு படிக்கும்போதே ஜீவாவும், சமந்தாவும் நண்பர்களாக இருக்கின்றனர். பிறகு சிறு பிரச்சினையில் இருவரும் சண்டைபோட்டு பிரிகிறார்கள். மீண்டும் 10-ம் வகுப்பு படிக்கும்போது ஒரே பள்ளிக்கூடத்தில் படிக்கின்றனர். பழைய பகையை மறந்து மீண்டும் நட்பாக பழகுகின்றனர். இந்த நட்பு 11-ம் வகுப்பு வரை தொடர்கிறது. அதன்பின் மீண்டும் சண்டை போட்டு பிரிகின்றனர். அதன்பிறகு தொடர்பே இல்லாமல் இருக்கும் இவர்கள் இருவரும் பல கல்லூரிகள் பங்கேற்கும் விழாவில் நேரிடையாக சந்திக்கின்றனர். அப்போது, தங்களுடைய பகையை மறந்து நெருக்கமாக பழகுகின்றனர். இதனால் இருவருக்குள்ளும் காதல் மலர்கிறது.

கல்லூரி முடிந்து வெளிவந்த பின்பும் தொடர்ந்து காதலிக்கிறார்கள். ஒருகட்டத்தில் இவர்களுக்குள் மீண்டும் பிரச்சினை வர சண்டைபோட்டு பிரிகிறார்கள். பல வருடங்கள் கழித்து, தனது காதலியான சமந்தாவை பார்க்க ஒரு கடலோரக் கிராமத்திற்கு ஜீவா வருகிறார். அங்கு இருக்கும் சமந்தாவை சந்திப்பதற்காக 10 நாட்கள் அங்கேயே தங்கிவிடுகிறார். சமந்தாவை சந்தித்து பேசும்போது, அப்போதும் இருவருக்கும் சண்டை வருகிறது. அதனால், மறுபடியும் பிரிந்து செல்கிறார்கள். சில மாதங்கள் கழித்து சென்னையில் மீண்டும் சந்திக்கின்றனர். அப்போது தனக்கு அடுத்த மாதம் கல்யாணம் நடக்கப்போவதாக சமந்தாவிடம் ஜீவா சொல்கிறார். அதைக்கேட்டு சமந்தா பிரமிப்படைகிறார். இறுதியில் ஜீவாவுக்கு கல்யாணம் நடந்ததா? அல்லது ஜீவா-சமந்தா காதல் ஒன்று சேர்ந்ததா? என்பதே மீதிக்கதை. கதையே இல்லாமல் ஒரு படம் எவ்வாறு எடுப்பது என்பதற்கு இந்த படம் ஒரு உதாரணம். பள்ளி மாணவன், கல்லூரி மாணவன், உத்யோகம் பார்க்கும் இளைஞன் என மூன்றுவித கெட்டப்புகளில் வலம் வருகிறார் ஜீவா. இளைஞனாக கவர்ந்த ஜீவா மாணவ பருவத்தில் நம்மை ஈர்க்கவில்லை. 14 வயதில் எப்படி இருந்தாரோ அதுபோலவே 26 வயதிலும் இருக்கிறார். எப்போதும் ஒருவித டல்லாகவே இருக்கிறார். நடிப்பில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். நித்யாவாக சமந்தா நடிக்கவில்லை, வாழ்ந்திருக்கிறார். அழகின் மொத்த உருவமாய் பளிச்சிடுகிறார். பள்ளி மாணவியாக குறும்பு செய்வதிலும், கல்லூரி மாணவியாக காதல் கொள்வதிலும், இளைஞியாக காதலில் பிரிந்த சோகத்தை வெளிப்படுத்துவதிலும் நவரசங்களை தன்னுடைய நடிப்பால் பிழிந்தெடுத்திருக்கிறார். சமந்தாவிடம் எதிர்பார்க்காத நடிப்பை ரொம்பவும் அசாத்தியமாய் செய்திருக்கிறார். முதல் பாதியில் பின்னணி இசை இல்லாமல் தொய்வில் போகும் திரைக்கதையை தூக்கி நிறுத்துகிறார் சந்தானம். இவர் அடிக்கும் கமெண்டுக்கு தியேட்டரில் விசில் பறக்கிறது. குறிப்பாக ‘பொண்ணுங்களும் கியாஸ் பலூனும் ஒண்ணு, விட்டா பறந்துருவாங்க’ என்று இவர் சொல்லும்போது கைதட்டல்கள் காதை பிளக்கிறது. இவருக்கு ஜோடியாக வரும் அந்த குண்டுப் பெண்ணும் நம்மை கவனிக்க வைக்கிறார். இயக்குனர் கவுதம்மேனனுக்கு காதல், பிரிவு என இரண்டையும் பிரதானமாக வைத்து திரைக்கதையை நகர்த்துவதில் வெற்றிகரமான அனுபவம் இருப்பதால் அதை எளிதாக கையாண்டிருக்கிறார். வருண்-நித்யா கதாபாத்திரங்களை நம்முடன் உலவவிட்டிருக்கிறார். படத்தில் முதல் 10 நிமிடங்கள் டப்பிங்படம் போல் கதையை நகர்த்தியிருக்கிறார். எம்.எஸ்.பிரபுவின் ஒளிப்பதிவு படத்திற்கு தேவையான உணர்வை கொடுத்திருக்கிறது. இசைஞானியின் இசையில் ஏற்கெனவே பாடல்கள் ஹிட்டாகிவிட்டது. அதை எப்படி படம் பிடித்திருப்பார்கள் என்ற ஆவலோடு வந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. அனைத்து பாடல்களும் மாண்டேஜூகளாக கொடுத்து ஏமாற்றம் அளித்திருக்கிறார். பின்னணி இசையும் பெரிதாக சொல்வதற்கில்லை. கவுதம் மேனனின் படங்களில் வசனம்தான் படத்திற்கு பெரிய பலமாக இருக்கும். அதுமட்டுமே இந்த படத்தில் இருப்பது இப்படத்திற்கு பலவீனமாக உள்ளது.

Wednesday, 5 December 2012

‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்-சினிமா விமர்சனம்.


நாளை மறுநாள் தன் காதலியான காயத்ரியுடன் கல்யாணம் என்கிற நிலையில் இருக்கும் புதுமாப்பிள்ளை விஜய் சேதுபதி. பொழுதுபோவதற்காக தனது நண்பர்கள் மூன்று பேருடன் கொஞ்ச நேரம் கிரிக்கெட் விளையாடிவிட்டு வரலாம் என்று செல்கின்றார்.

நண்பன் அடிக்கும் பந்தை பறந்து வந்து பிடிக்கும்போது கீழே விழுந்து தலையில் அடிபட்டு விடுகிறது. இதனால் கடந்த ஓரிரு வருடங்களில் நடக்கும் அத்தனை சம்பவங்களும் மறந்து போய்விடுகிறது. தற்போதும் அவரிடம் எது சொன்னாலும் அதனையும் உடனுக்குடன் மறந்து போகிறார்.

இந்த பிரச்சினை பெண் வீட்டுக்குத் தெரிந்தால் திருமணம் நடக்கவிடமாட்டார்கள் என நண்பர்கள் நினைக்கிறார்கள். இந்நிலையில் விஜய் சேதுபதிக்கும், காயத்ரிக்கும் திருமணம் நடந்ததா? என்பதை படம் முழுக்க சிரிக்க சிரிக்க சொல்லியிருக்கிறார்கள்.

படம் முழுக்க கலகலப்பாக போகிறது. சீரியசான கதையை இப்படி காமெடியாக சொல்லமுடியுமா? என்னும் கேள்விக்கு சொல்லமுடியும் என சாதித்துக் காட்டியிருக்கிறார் இயக்குனர் பாலாஜி தரணிதரன்.

விஜய் சேதுபதி மற்றும் அவருடன் நணபர்களாக வரும் மூன்று பேரும் தங்களது கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்கள். விஜய் சேதுபதி நடிப்பில் தனி முத்திரை பதிக்கிறார். திருமண மண்டபத்தில் இவர் செய்யும் கலாட்டாவாகட்டும்.... தலையில் அடிபட்டு நினைவுகளை இழந்துவிட்டு சொன்ன வார்த்தையையே திரும்ப திரும்ப சொல்லும் போதும் ரொம்பவும் கலகலப்பூட்டுகிறார்.

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக வருகிறார் காயத்ரி. படத்தில் இவருக்கு நீண்ட நேரம் வருகிற கதாபாத்திரம் இல்லை. ஆகையால் நடிப்பதற்குண்டான வாய்ப்பும் குறைவே.

படத்திற்குண்டான லொக்கேஷன்ஸ் தேர்வும் குறைவே. கல்யாண மண்டபம், மருத்துவமனை, வீடு, கிரிக்கெட் கிரவுண்டு என நான்கு இடங்களிலேயே படத்தை எடுத்து முடித்திருக்கிறார்கள். கடைசி அரைமணி நேரம் கதை முழுக்க முழுக்க திருமண மண்டபத்திலேயே நடக்கிறது. இருப்பினும், எந்தவித சலிப்பையும் ஏற்படுத்தாத அளவுக்கு படமாக்கியிருக்கிறார்கள்.

இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் பிரேம்குமார் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தைதான் படமாக்கியிருக்கிறார் இயக்குநர் பாலாஜி தரணிதரன். இவருடைய ஒளிப்பதிவும், இசையமைப்பாளர் வேத்சங்கரின் பின்னணி இசையும் படத்திற்கும் மேலும் பலம் சேர்த்திருக்கின்றன.

மொத்தத்தில் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ சிரிப்பு அலை.

Friday, 30 November 2012

நீர்ப்பறவை சினிமா விமர்சனம்


நடிகர் : விஷ்ணு
நடிகை : சுனைனா
இயக்குனர் : சீனு ராமசாமி
இசை : என்.ஆர்.ரகுநந்த
ன்ஓளிப்பதிவு : பாலசுப்பிரமணியன்
மீனவர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் கதையாக எடுக்கப்பட்டுள்ளது

நகரத்தில் இருந்து தனது மனைவியுடன் அம்மாவைப் பார்க்க வரும் மகன், அங்கு இருக்கும் தங்களது பழைய வீட்டை விற்றுவிட்டு நகரத்தில் ஒரு வீடு வாங்கலாம் என அம்மாவிடம் கூறுகிறான். ஆனால் வீட்டை விற்கமுடியாது என அவனுடைய அம்மா எஸ்தர் மறுக்கிறார். ஏன் என்று கேட்டதற்கு, கடலுக்கு சென்ற உன் அப்பா எப்படியும் திரும்பி வருவார். அதனால் விற்கவேண்டாம் என்று கூறுகிறாள்.

ஒருகட்டத்தில் அம்மா மீது சந்தேகம் வர வீட்டின் ஒரு இடத்தை கணவனும், மனைவியும் சேர்ந்து தோண்டிப் பார்க்கிறார்கள். அப்போது அங்கே ஒரு எலும்புக்கூடு இருக்க, சந்தேகப்பட்ட மகனும், மருமகளும் போலீசுக்கு தகவல் தெரிவிக்கிறார்கள். போலீஸ் விசாரணையில் அது காணாமல் போன எஸ்தரின் கணவர் அருளப்பசாமியின் உடல் என தெரிகிறது. கணவனை எஸ்தர் கொலை செய்தாளா? என நினைத்துக் கொண்டிருக்கும்போதே பிளாஷ்பேக் விரிகிறது.

மீனவரான பூ ராம், சரண்யாவின் மகன் விஷ்ணு. எந்தவொரு வேலைக்கும் போகாமல் குடியே கதி என்று சுற்றிக் கொண்டிருப்பவரை ஊரே உதாசீனப்படுத்துகிறது. மற்றவர்களிடம் பிச்சை எடுத்தாவது இன்று குடித்துவிட வேண்டும் என்ற கொள்கையோடு திரிகிறார்.

இப்படியானவரின் கண்ணில் ஒருநாள் இயேசுவுக்கு ஊழியம் செய்யும் சுனைனா படுகிறார். விஷ்ணு மீது கை வைத்து ஜெபம் செய்யும் சுனைனா மீது காதல் கொள்கிறார். குடிப்பழக்கத்தில் இருந்து மீண்டு வரும் விஷ்ணுவை சுனைனாவும் காதலிக்க ஆரம்பிக்கிறார்.

இரு வீட்டாரின் சம்மதத்தோடு திருமணத்தை முடிக்க நினைக்கிறார் பாதிரியார் அழகம்பெருமாள். ஆனால், எந்த வேலையும் இல்லாத காரணத்தால் சுனைனாவை விஷ்ணுவுக்கு திருமணம் செய்து கொடுக்க மறுக்கிறார் சுனைனாவின் வளர்ப்பு தாய்.

இதனால் மீன்பிடி தொழிலுக்கு செல்ல நினைக்கும் விஷ்ணுவை அவனது பிறப்பு பற்றி குறை கூறுகிறார்கள். ஊரார் மீனவன் மட்டும்தான் கடலுக்குள் சென்று மீன்பிடிக்க முடியும் என கூறி, அவனை மீன்பிடிக்க சேர்க்க மறுக்கிறார்கள். இதனால் தனது தந்தையின் பெயரில் படகு வாங்கி இதே கடலில் நான் மீன் பிடிப்பேன் என ஊரார் முன் சபதம் போட்டுச் செல்கிறார்.

இதற்காக விஷ்ணுவின் தந்தை, படகு செய்யும் சமுத்திரகனியிடம் தன் மகனை நம்பி படகு செய்யச் சொல்கிறார். சமுத்திரக்கனியும் பெருந்தன்மையோடு படகு செய்ய ஒப்புக் கொள்கிறார்.

சிறுசிறு வேலைகள் செய்து படகுக்குண்டான பணத்தை கஷ்டப்பட்டு கட்டி, தனது சொந்த படகுடன் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்கிறான் விஷ்ணு. சுனைனாவின் தாயார் மனம்மாறி விஷ்ணுவுக்கே திருமணம் செய்து வைக்கிறார். இவர்கள் இருவருக்கும் குழந்தையும் பிறக்கிறது.

இருவரும் சந்தோஷமாக வாழ்ந்துவரும் நிலையில், ஒருநாள் மீன்பிடிக்கச் செல்லும் விஷ்ணு திரும்பி வராததால் ஊர்மக்கள் அவனைத் தேடி அலைகிறார்கள்.

இந்நிலையில் 25 வருடம் கழித்து அவனது உடல் வீட்டுக்குள் எப்படி வந்தது? யார் அவனைக் கொன்றார்கள் என்பதை மீன் மணம் வீசும் கடல்காற்றோடு சேர்ந்து சொல்லியிருக்கிறார்கள்.

இன்றைய காலக்கட்டத்தில் மீனவ சமுதாயத்தில் அன்றாட பிரச்சினையாக நிகழ்ந்து கொண்டிருக்கும் சூழல்களை மிகவும் யதார்த்தமான பதிவாக பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் சீனு ராமசாமி.

மீனவர்களை கடல் எல்லையில் கண்மூடித்தனமாக சுட்டு வீழ்த்தும் இலங்கை ராணுவத்தினரின் கொடூரச் செயலினால் பாதிக்கப்படும் அப்பாவி மீனவ சமூகத்தின் இன்னல்களை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள்.

தன் கணவன் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு நியாயம் கேட்க முடியாமல் 25 வருடமும் அவர் நினைவில் மௌனம் காத்து நிற்கும் நாயகியின் கண்ணீரும், நியாயமும் இம்மாதிரியான சம்பவங்களால் தன் கணவர்களை இழந்த மீனவ பெண்மணிகளுக்கு இந்தப் படம் மருந்தாக இருக்கும். அனைத்து கதாபாத்திரங்களின் தேர்வும் கதைக்கு மிகச்சரியாக பொருந்தும்படி தேர்ந்தெடுத்திருக்கிறார். மீனவ கிராமங்களை கடல் பிண்ணனியில் காட்டிய விதம் அருமை.

அருளப்பசாமியாக வரும் விஷ்ணு, முதல் பாதியில் குடிகாரனாகவும், பிற்பாதியில் திருந்தி காதலியை கரம்பிடிக்க மீனவனாக முயற்சிக்கும் காட்சிகளிலும் திறமையாக நடித்திருக்கிறார். இவர் நடிப்பில் நல்ல முதிர்ச்சி தெரிகிறது. தொடர்ந்து பல திறமையான இயக்குனர்கள் தன்னை நாடி வரலாம் என இவரது நடிப்பில் சவால் விட்டிருக்கிறார்.

சுனைனா எஸ்தர் என்ற கதாபாத்திரத்திற்கு மதிப்பு கொடுக்கும் விதத்தில் தனது நடிப்பை சிறப்பாக பதிவு செய்திருக்கிறார். பாவடை, சட்டை என படம் முழுக்க வலம்வரும் இவர், கிறிஸ்துவ பெண்ணாக மனதில் நிலைத்து நிற்கிறார். தன் கணவனை இழந்து வாடும் காட்சிகளில் தனது நடிப்பை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

விஷ்ணுவின் அம்மாவாக வரும் சரண்யா பொன்வண்ணன், மீனவ குடியிருப்புகளில் வாழும் ஒரு சராசரி பெண்ணைப் போன்றே வாழ்ந்திருக்கிறார். இவர்தான் சரண்யா பொன்வண்ணன் என்று ஒரு துளியும் திரையில் தெரியவில்லை. அவ்வளவு இயல்பாக மேரி என்ற கதாபாத்திரத்தில் ஒன்றியிருக்கிறார் என்பதே உண்மை. தமிழ் சினிமாவில் இவரின் நடிப்புக்கு இது ஒரு மைல்கல். இன்னொரு தேசிய விருதுக்கு தகுதியானவர் என்பதை நிரூபித்திருக்கிறார்.

ரகுநந்தன் இசையில் வைரமுத்து வரிகளுடன் வந்துள்ள அனைத்து பாடல்களும் அருமை. மீனவனைப் பற்றிய பாடலாகட்டும், தேவன் மகளே என காதலியை வர்ணிக்கும் பாடலாகட்டும் வைரமுத்துவின் வரிகள் அனைத்தும் மீன்வாசத்துடன் நம்மை ரசிக்க வைக்கிறது.

தம்பி ராமையா, அழகம்பெருமாள், சமுத்திரகனி, வடிவுக்கரசி, பிளாக்பாண்டி, நந்திதாதாஸ் ஆகியோர் அவரவர் கதாபாத்திரங்களை நிறைவாக செய்திருக்கிறார்கள். நந்திததாஸ் சிறிது நேரமே வந்தாலும் மனதில் நிற்கிறார். சமுத்திரகனி பேசும் வசனங்கள் நெஞ்சில் நங்கூரம் பாய்ச்சியதுபோல் நீங்காமல் இருக்கின்றன.

இப்படத்திற்கு எழுத்தாளர் ஜெயமோகனின் வசனங்கள் மேலும் பலம் சேர்த்திருக்கின்றன. குறிப்பாக, சமுத்திரகனி பேசும் வசனத்தில் ‘இலங்கை ராணுவம் மீனவன் ஒருவனை சுட்டுக் கொன்றால், தமிழக மீனவன் சுட்டுக் கொல்லப்பட்டான் என்றுதான் சொல்கிறோம். அதனை ஏன் இந்திய மீனவன் என்று சொல்லக்கூடாது’ என்பதுபோன்ற வசனங்கள் கேட்பதோடு அல்லாமல், சிந்திக்கவும் வைக்கின்றன.

ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியத்தின் ஒளிப்பதிவில் மீனவ கிராமத்தை சொர்க்கமாக காட்டியிருக்கிறார். ஒவ்வொரு காட்சியும் கண்களுக்கு விருந்தாக அமைந்திருக்கிறது. இவருடைய ஒளிப்பதிவு கதைக்கு மேலும் வலுசேர்க்கிறது.

மீனவர்களின் உடல்மீது பாயும் தோட்டாக்கள்கூட ஒருதுளி கண்ணீருடன்தான் அந்த மீனவனின் உடலைத் துளைக்கிறது. துப்பாக்கிகூட தோட்டாக்களை கண்ணீரோடுதான் அனுப்பி வைக்கிறது.

இதை உபயோகிக்கும் மனிதனின் உள்ளம் மட்டும்தான், அவன் தன் இனம் என்பதை மறந்து ரத்தவெறியோடு செயல்படுகிறது. இம்மாதியான மனிதர்களை இதுபோன்ற படங்கள் சற்று சிந்திக்க வைக்கும் என்பதை ‘நீர்ப்பறவை’ கண்ணீரோடு சொல்கிறது.

Thursday, 29 November 2012

கல்லணை



நீர்ப்பாசன பொறியியல் துறையில் உலகுக்கே தமிழர் முன்னோடி என்ற உண்மையை கரிகாலன் கட்டிய கல்லணை பறைச்சாற்றிக் கொண்டிருக்கிறது.அதன் சிறப்புகளை எடுத்துரைக்கும் கட்டுரையை இங்கே காண்போம்.(உண்மை ஜனவரி 1631/2010 இதழில் முனைவர் பேராசிரியர் ந.க. மங்கள முருகேசன்  எழுதிய கட்டுரையை நன்றியுடன் இங்கே அறியத்தருகிறோம்.)சங்க காலத்திய முடியுடை மூவேந்தர்களில் சோழ மன்னர்களில் தலை சிறந்தவர் கரிகாற்சோழன். கரிகாலனைப் பட்டினப்பாலை, பொருநராற்றுப்படை முதலிய பத்துப்பாட்டு நூல்கள் புகழ்ந்து உரைக்கின்றன.


 கரிகாற் சோழனின் பெருமைக்கு இன்றும் சான்றாய் விளங்குவது அவன் கட்டிய கல்லணை.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்றும் தமிழனின் பொறியியல் ஆற்றலுக்குப் புகழ்ப் பரணி பாடிக்கொண்டிருப்பது காவிரியில் கரிகாலன் கட்டிய கல்லணை. பொங்கிச் சிரிக்கும் தஞ்சையாகச் சோழப்பெருநாடு, பொய்யாச் சிறப்பின் வளம் பெற்ற மண்ணாகச் சோழநாடு சோறுடைத்து என்று பெருமை பெறக் காரணமான   காவிரிப் பெண்ணுக்குக் கால்கட்டாகக் கல்லணையைக் கட்டிப் பெருமை பெற்றான் இந்தச் சோழ வேந்தன் . இந்தக் காவிரிப் பெண்  எங்கு பிறந்து, எங்குத் தவழ்ந்து வருகிறாள் என்று கொஞ்சம் மேற்கே திரும்பிப் பார்ப்போம்.
கர்நாடக மாநிலத்தின் பிரம்மகிரி குன்றில் தலைக்காவிரி என்று பெயரிடப்பட்ட இடத்தில் கடல் மட்டத்திலிருந்து 4400 அடி உயரத்தில் காவிரி உற்பத்தியாகி 384 கி. மீ. தூரம் பயணம் செய்து தமிழகத்தின் மேட்டூரை அடையும் காவிரி ஓர் இடத்தில் ஆடு தாண்டும் அளவுக்குத் தன்னை ஒடுக்கிக்கொள்கிறது. இந்த இடத்திற்குப்பெயரே மேக் தாட்டு (ஆடு தாண்டி).
 ஒகேனக்கல்லிலிருந்து பவானி வரை காவிரி தெற்குத் திசையில் ஓடுகிறது. உதகைக்குத் தென்மேற்கே நீலகிரி மலையில் கடல் மட்டத்துக்குத மேல் 8000 அடி உயரத்தில் பிறக்கும் பவானி ஆறு. பவானி ஊருக்கு தேற்கே காவிரியில் கலக்கிறது. பவானியும், காவிரியும்  கூடுமிடம் மேட்டூர் அணைக்கு 80 மைல் தெற்கே இருக்கிறது.
 இதன் பின், காவிரி கிழக்குத் திசையில் நொய்யலும், அமராவதியும் காவிரியில் சேர்கின்றன. கோவை மாவட்டத்தில் நொய்யலும், மூணாறு பகுதியிலிருந்து அமராவதியும் உருவாகின்றன. இப்பொழுது  காவிரி நன்கு  விரிந்து அகன்ற காவிரியாகிறது.இப்படி வெள்ளத்தை மட்டுமல்லாமல், நம் உள்ளத்தையும் அள்ளிக்கொண்டு ஆழ்ந்து அகன்று வரும் காவிரிக்கு அன்று அணை கட்டிய அற்புதத்தைச் செய்தவன் சோழ நாட்டுத்தமிழ்த் தலைவன் கரிகாலன்.வெள்ளம் கொள்ளுமிடம் போதாமல் திருச்சிக்கு மேற்கே பத்து மைல் தொலைவில் எலமனூறுக்கு அருகில் காவிரி, கொள்ளிடம் என்று இரண்டாகப் பிரிகிறது.பிரிந்து போகும் கொள்ளிடம், மீண்டும் காவிரியுடன் கலக்கும் நோக்கத்துடன், திருச்சிக்குக் கிழக்கே கல்லணைக்கருகில் காவிரியின்  அருகே வருகிறது.
 கல்லணையில் காவிரிக்கும் கொள்ளிடத்திற்கும் இடையே ஒரு வித இணைப்பு ஏற்படுகிறது.
 ஆனால் தாழ்ந்து உள்ள கொள்ளிடமும், உயர்ந்து விட்ட காவிரியும் இயற்கை விதியின் படியே ஒன்றாக முடிவதில்லை. இந்தக் காவிரி, கொள்ளிடம் ஆகியவற்றின் ஊடலின் பின் நிகழ்ந்த கூடலில் பிறந்ததுதான்  திருவால்கமும், திருஆனைக்காவும் அமைந்திருக்கும் திருவால் கத்தே.திருவால்கத்தின் மேல் முனையில் காவிரியும், கொள்ளிடமும் பிரியுமிடத்தில் மேலணை இருக்கிறது.  மேலணை என்பது உண்மையில் அணையேயல்ல. நீரொழுங்கி என அழைக்கப்படும் ரெகுலேட்டார் தான். வெள்ளம் வரும் போது மேலணை ரெகுலேட்டரைத் திறந்து வெள்ளத்தை கொள்ளிடத்திற்குள் வடித்து விடுவார்கள்.
 அப்படியானால், அணை என்பது அன்று கரிகாலன் கட்டினானே அந்தக் கல்லணைதான் இது. திருச்சிக்குக் கிழக்கே எட்டாவது மைலில் கரிகாலன் கட்டிய புகழ் பெற்ற அணையாகும். காவிரியின் கல்லணை இருக்கும் இடத்தில் காவிரியின் பக்கத்திலேயே கொள்ளிடமும் ஓடுகிறது.
காவிரி உயர் மட்டம், கொள்ளிடம் பள்ளம், கரிகாலன் கல்லணை கட்டுவதற்கு முன், காவிரி தன் வடகரையை உடைத்துக்கொண்டு கொள்ளிடத்திற்கு வழிந்து விடுவதும், வெள்ளம் வடிந்தபின் உழவர்கள் உடைந்த கரையைச் செப்பனிடுவதும், அடுத்த வெள்ளத்தில் கரை மீண்டும் உடைந்து விடுவதும் மிகச் சாதாரணமாக நடந்து கொண்டுஇருந்திருக்க வேண்டும்.இவற்றையெல்லாம் நீக்குவிக்கும் நோக்கத்துடன் கரிகாலன் திட்டமிட்டுக் கல்லணையை அமைத்த பொறியியல் ஆற்றல் வியப்பை ஏற்படுத்துகிறது.காவிரிக் கரை வழக்கமாக உடையும் இடத்தில் ஏற்பட்டிருந்த வடிகாலுக்குக் குறுக்கே மாபெரும் கற்களைக் கொண்டு மணல் அடித்தளத்தின் மேலேயே அணையை அமைத்தான். அக்கற்கள் உள்ளளவும் காவிரி உள்ளளவும் நிலைத்திருக்கும் படி அணையைக் கட்டினான்.
 கீழே காவிரியிலும்  அதனின்று பிரியும் வெண்ணாற்றிலும் பாசனத் தண்ணீரை எளிதில் தள்ளுவதற்கு வேண்டிய உயரத்துக்கு அணையை எழுப்பியுள்ளான் கரிகாலன்.
 ஆற்றைத் தோண்டி, பாறையைக் கண்டு அதன்மேல் அணையை கட்டுவது போல் அன்று மணலையே அடித்தளமாகக் கொண்டு அணை கட்டுவது அதற்குத் தனித் திறமை வேண்டும். மேல் நாட்டவருக்குக் கூட இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்வரை இதில் அதிக அனுபவம் கிடையாது. கல்லணை கட்டுவதற்கு இருந்திருக்கக் கூடிய பொறியியல் திறனை எண்ணி இன்றும் பல நாட்டுப் பொறியாளர்கள் மெச்சுகிறார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டில், காவிரித் தலைப்பிலும் “”நீரொழுங்கி” மதகுகள் அமைத்தார்கள். இதனால் காவிரியிலும், வெண்ணாற்றிலும் தண்ணீரை வேண்டிய அளவு அனுப்ப வழியுண்டாயிற்று.
கரிகாலன் அமைத்த கற்களின் மேலேயே கல்லணைக்கு ஒரு நீரொழுங்கி கட்டினார்கள்.
கல்லணை ஓரத்தில் மணற் போக்கிகளும் அமைத்தார்கள். இவ்வமைப்புகளால், காவிரியிலும் வெள்ளாற்றிலும் தண்ணீரை வேண்டிய அளவு அனுப்ப வழியுண் டாயிற்று. கொள்ளிடத்தில் உள்ள அணைக்கரையில் பாசனத்துக்கு கல்லணை மணற் போக்கிகள் வழியாக தண்ணீரை அனுப்பவும் முடிகிறது. வெள்ளத்தை மீண்டும் ஒரு முறை கொள்ளிடத்திற்குள் வடிப்பதும் இயலுகிறது.
பின்னர், 1934ல் மேட்டூர் நீர்த்தேக்கத்தை ஏற்படுத்திய பொழுது, புதிய கல்லணைக் கால்வாய் தலை மதகுக்காக வெண்ணாற்றுத் தலைமதகுக்கு அதன் தெற்கில் ஒரு நீரொழுங்கி அமைத்தனர். இப்படி இரண்டாயிரம் ஆண்டுகளாக விரிவுஅடைந்துள்ள  கல்லணை அமைப்புகள் தாம் தஞ்சைப்பாசனத்திற்கு வழிவகுத்த தலைவாசலாக அமைந்துள்ளன.
 கல்லணையிலிருந்து சுமார் 20 மைல் வரை, காவிரியும் கொள்ளிடமும் அருகருகே ஓடுகின்றன.
கீழே போகப் போகக் காவிரி மீண்டும் குடமுருட்டி, அரசலாறு, மன்னியாறு, வீரசோழனாறு  என்று பிரிந்து கொண்டே போகிறது.
 கல்லணையிலேயே பிரிந்து வெண்ணாறும்,  வடவாறும், வெட்டாறு, வெள்ளையாறு, கோவையாறு, பாமினியாறு, முள்ளியாறு என்று பிரிந்து கொண்டே போகிறது. சுமார் 3ஆயிரம் சதுர மைல் பகுதியை செழிக்கச் செய்து விட்டு கிளைகளில் சில மீண்டும் ஒன்று சேர்கின்றன: சேர்ந்து இனி பயன்படுத்த முடியாது என்றுள்ள கடைக்கோடி  கழிவு நீரையும் மழை தண்ணீரையும் சுமந்து கொண்டு கடலில் கலந்து விடுகின்றன.
கல்லணைக்கு வேண்டிய பெரிய கற்களை எல்லாம் திருவெறும்பூர் பகுதியில் இருந்து கரிகாலன் கொண்டுவந்து கட்டினான் என்று கூறுகின்றனர்.

Monday, 26 November 2012

கலக்கும் இனியா!!!!!


வாகை சூடவா’ படத்தில் கிராமத்துப் பெண் வேடத்தில் அறிமுகமானார் இனியா. அப்படத்தில் ‘சர சர சாரக் காற்று வீசும் போது சாரப் பார்த்து பேசும் போது சாரப்பாம்பு போல நெஞ்சில் சத்தம் போடுது’ என்று பாடி இவர் நடனம் ஆடியது ரசிகர்களை சுண்டி இழுத்தது.
சமீபத்தில் ரிலீசான ‘அம்மாவின் கைப்பேசி’ படத்திலும் கிராமத்து பெண்ணாக வந்தார். இதில் அவரது நடிப்பு பேசப்பட்டது. ரசிகர்களிடம் இருந்து பாராட்டுகளும் குவிகிறது. இப்படத்தில் தனக்கு விருது

Wednesday, 21 November 2012

அம்மாவின் கைப்பேசி- சினிமா விமர்சனம்.


ஒன்பது குழந்தைகளுக்கு தாயான ரங்கநாயகியின் கடைசி மகனாக சாந்தனு. ஊரில் வேலை வெட்டி இல்லாமல், வீட்டில் அவ்வப்போது சிறுசிறு திருட்டுக்களை செய்து, நண்பர்களுடன் சுற்றிக்கொண்டு ஊதாரியாக திரிகிறான். தனது முறைப்பெண்ணான இனியாவை காதலிக்கிறான். தன் காதலுக்காக திருந்தி, இனியாவின் அப்பாவிடம் வேலைக்கு சேர்கிறான்.


இந்நிலையில், தனது அண்ணன் குழந்தைக்கு நடைபெறும் காதுகுத்து நிகழ்ச்சி ஒன்றில் நகை காணாமல் போகிறது. அந்த நகையை சாந்தனுதான் திருடிவிட்டான் என்று அவனது சகோதரர்கள் அவன்மீது திருட்டு பட்டம் கட்டுகின்றனர்.

இதனால், கோபமடைந்த ரங்கநாயகி அவனை திட்டி வீட்டை விட்டு வெளியே அனுப்புகிறாள். மனமுடைந்த சாந்தனு அந்த ஊரை விட்டு செல்கிறான்.

ஏழு வருடங்களாக சாந்தனு எங்கிருக்கிறான்? என்பது அறியாத அவனது அம்மாவுக்கு திடீரென பார்சலில் ஒரு செல்போன் வருகிறது. அந்த போனில் பேசும் சாந்தனு, நான் இன்னும் சில தினங்களில் ஊருக்கு வருகிறேன் என்று கூறுகிறான்.

வீட்டை விட்டு வெளியேறிய சாந்தனு ஒரு கல்குவாரியில் வேலைக்கு சேர்கிறான். அக்குவாரியில் பெரிய பொறுப்பில் அமர்கிறான். அங்கு சூப்பர்வைசராக பணிபுரியும் நாகிநீடு கல்குவாரியில் செய்யும் முறைகேடுகளை அக்குவாரி முதலாளியான அழகம்பெருமாளிடம் சொல்லிவிடுகிறான் சாந்தனு.

இதனால், நாகிநீடுவை போலீஸ் கைது செய்து, அவனிடமிருந்து முறைகேடு செய்த பணம் மற்றும் பொருள்களையும் கைப்பற்றி விடுகிறது. இதனால், ஆத்திரம் கொண்ட நாகிநீடு, தன்னுடைய உதவியாளரான தங்கர்பச்சானின் உதவியோடு சாந்தனுவை தீர்த்துக்கட்ட எண்ணுகிறார்.

ஒருகட்டத்தில் சாந்தனு தனது சொந்த ஊருக்கு கிளம்பும் நேரத்தில் இருவரும் சேர்ந்து அவனை தீர்த்துக் கட்டுகிறார்கள். அப்போது சாந்தனுவிடம் இருக்கும் பணத்தை இருவரும் பிரித்துக் கொள்கிறார்கள்.

பணத்தோடு வீடு திரும்பும் தங்கர்பச்சான் அதனை தன் வீட்டில் பத்திரமாக வைத்திருக்கிறார். அதை பார்த்துவிடும் அவரது மனைவி தங்கர்பச்சானை திட்டுகிறார். இந்த திருட்டு பணத்தை உடனடியாக திருப்பிக் கொடுத்துவிட்டு வருமாறு அவரை வற்புறுத்துகிறார். இதனால் தங்கர்பச்சான் அந்த பணத்தை எடுத்துக்கொண்டு நாகிநீடுவை பார்க்கச் செல்கிறார். அதனை வாங்க மறுக்கிறார் நாகிநீடு.

பணத்தை என்னசெய்வதென்று தெரியாமல் தவிக்கும் தங்கர்பச்சான் சாந்தனு குடும்பத்திடமே அதை ஒப்படைக்க முடிவெடுக்கிறார். அதன்படி சாந்தனுவின் சொந்த ஊருக்கு செல்கிறார் தங்கர்பச்சான். அங்கு என்ன நடந்தது? என்பதே மீதிக்கதை.

கிராமத்து சாயலில் முழுக்க முழுக்க கண்களில் ஈரம் கசிந்த தாயின் வலியை படமாக்கியிருக்கிறார் இயக்குனர் தங்கர்பச்சான். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இவர் தன் கதாபாத்திரத்தை மிகவும் சிறப்பாகவே செய்திருக்கிறார். கிராமத்தின் அடையாளங்களை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

அண்ணாமலையாக வரும் சாந்தனு கிராமத்து பையனாக வாழ்ந்திருக்கிறார். தனது சகோதரர்கள் திருட்டு பட்டம் கட்டி வீட்டை விட்டு வெளியேற்றும் போதும், தன் காதலி காதலை மறுக்கும்போதும் தனது எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்கிறார்.

சாந்தனுவின் முறைப்பெண்ணாக வரும் இனியா, தனது கதாபாத்திரத்தை நிறைவாக செய்திருக்கிறார். ஏழு வருடம்  தன் மாமன் வராத காரணத்தினால், இறந்துவிட்டதாக எண்ணி வேறொருவரை திருமணம் செய்துகொள்ளும் இவர், மாமன் உயிரோடு இருக்கிறான் என்று அறிந்ததும் இவர் கண்ணீர் விட்டு அழும் காட்சி நெஞ்சை உருக்குவதாக உள்ளது.

சாந்தனுவின் அம்மாவாக வரும் ரேவதி, கிராமத்து தாயின் பாசத்தையும், பரிதவிப்பையும் மிகவும் உருக்கமாக வெளிப்படுத்தியிருக்கிறார். படத்தில் இவர் இறக்கும் காட்சியில் ரசிகர்களின் கண்களும் கலங்கத்தான் செய்கிறது.

படத்தில் பெரும்பாலும் சோகமும், அழுகையுமாகவே உள்ளதால், இன்றைய காலக்கட்ட ரசிகர்களை கவருமா என்று சந்தேகத்தை எழுப்புகிறது. ரோஹித் குல்கர்னியின் இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிக்கும் ரகம். ‘அம்மா தானே’ என்ற பாடல் நம்மைத் தாலாட்ட வைக்கிறது.
Key word:அம்மாவின் கைப்பேசி- சினிமா விமர்சனம்.

Thursday, 15 November 2012

துப்பாக்கி-சினிமா >> விமர்சனம்.


இந்திய இராணுவத்தில் அதிகாரியாக பணிபுரிகிறார் விஜய். விடுமுறைக்கு மும்பை வருகிறார். இங்கு அப்பா, அம்மா மற்றும் இரண்டு தங்கைகள் இரயில் நிலையத்தில் இவருக்காக காத்திருக்கிறார்கள். இரயில் தாமதமானதால் பதற்றம் அடைகிறார்கள்.


பின்னர் விஜய் வந்தவுடன் அவரை நேராக திருமணத்திற்கு பெண் பார்க்க இராணுவ உடையிலேயே அழைத்து செல்கிறார்கள். அங்கு பெண்ணாக காஜல் அகர்வால் அறிமுகமாகிறார். புடவையை கட்டி குடும்பபாங்காக தெரிகிறார் காஜல். இவரை பார்த்துவிட்டு செல்லும் வழியிலேயே விஜய் பெண் வீட்டாருக்கு போன் செய்து பெண்ணை பிடிக்கவில்லை என்று சொல்கிறார்.

குடும்பபாங்காக இருப்பதால் காஜலை வேண்டாம் என்று சொன்ன விஜய் மறுநாள் மும்பை எஸ்.ஐயும், தனது நண்பனுமான சத்யனுடன் பெண்கள் கல்லூரிக்கு பாதுகாப்புக்காக செல்கிறார். அங்கு நடைபெறும் குத்து சண்டை போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறுகிறார் காஜல் அகர்வால். இதை கண்ட விஜய், காஜல் மீது காதல் வசப்படுகிறார்.

ஒருநாள் சத்யனுடன் பேருந்தில் பயணம் செல்கிறார் விஜய். அப்பொழுது பயணி ஒருவர் தனது பர்சை காணவில்லை என்று கூச்சலிடுகிறார். இதனால் பேருந்தை வழியில் நிறுத்தி விஜய் மற்றும் சத்யன் பயணிகள் அனைவரையும் சோதனையிடுகிறார்கள். அப்பொழுது திருடனை கண்டுபிடித்து விடுகிறார்கள். ஆனால் பேருந்தில் இருந்து மற்றொரு பயணி இறங்கி ஓடுகிறார். அதை கண்ட விஜய் அவரை துரத்தி பிடித்து விசாரிக்கிறார். அப்பொழுது அவர்கள் வந்த பேருந்து வெடித்து சிதறுகிறது. இதனால் விஜய் அவரை பிடித்து போலீஸில் ஒப்படைக்கிறார். போலீஸ் பிடியில் இருந்து தப்பிக்கும் இவரை விஜய் பிடித்து தனது வீட்டில் அடைத்து வைக்கிறார். இவரிடம் இருந்து மற்ற உண்மைகளை ஆராய்கிறார். இதற்கு பின்னனியில் யார் யார் இருக்கிறார்கள் என்றும் கண்டுபிடிக்கிறார்.


அந்த விசாரணையில், அவன் மும்பையில் 12 இடங்களில் குண்டு வைக்க திட்டம் தீட்டியது தெரியவருகிறது. இதனை தடுக்க தனது இராணுவ நண்பர்கள் உதவியோடு விஜய் முறியடிக்கிறார். இதை அறிந்த தீவிரவாதி தலைவன் விஜயையும் அவரது நண்பர்களையும் அழிக்க களம் இறங்குகிறார். இதில் இருந்து விஜய் தப்பித்தாரா? அல்லது அவர்களை அழித்தாரா? காஜல் அகர்வாலை கரம் பிடித்தாரா? என்பது மீதி கதை.

இது விஜய் படங்களில் முற்றிலும் மாறுபட்ட படம். இராணுவ கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல் தனது உடல் அமைப்பை மாற்றி அருமையாக பொருந்தி உள்ளார். படம் முழுவதும் ஒரு இராணுவ வீரரின் தியாகத்தையும் துணிச்சலையும் தனது வசனங்களால் ரசிகர்களிடம் அழுத்தமாக பதிய செய்கிறார்.

குறிப்பாக ஆயிரம் பேரை கொல்வதற்காக ஒரு தீவிரவாதியே உயிரை கொடுக்கிறான். ஒரு நாட்டை காப்பாற்றுவதற்காக உயிரை கொடுக்க நாம் ஏன் துணிய கூடாது என்ற வசனம் சிந்திக்க வைக்க கூடியது.

காஜல் அகர்வால் முந்தைய படங்களைவிட துப்பாக்கியில் சற்று தூக்கலாகவே இருக்கிறார். மும்பை கதைக்கு ஏற்ப வில்லனாக வித்யுத் ஜம்வால் பொருந்திருக்கிறார். இறுதிக் காட்சியில் விஜய்யுடன் இவர் போடும் சண்டைக் காட்சி அழகு.

சந்தோஷ்சிவன் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் ரசிகர்களுக்கு விருந்து. ஹரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். குறிப்பாக விஜய் பாடிய கூகுல்... கூகுல்... பாடல் முணுமுணுக்க செய்கிறது.

இப்படத்தில் நாட்டை வெறுத்து இருக்கும் இளைஞர்களை, தீவிரவாதிகள் எப்படி தவறாக பயன்படுத்துகிறார்கள் என்பதை இயக்குனர் முருகதாஸ் காண்பித்து இருக்கிறார். விஜயையும் இந்தி பேச வைத்திருக்கிறார். இவரது இயக்கத்தில் இந்தப்படம் முற்றிலும் மாறுபட்ட படம்.

Key word:துப்பாக்கி -சினிமா. 

Wednesday, 7 November 2012

விமர்சனம் - சக்கரவர்த்தி திருமகன்.


குற்றாலத்தில் வெளிநாட்டு தம்பதியை ஒரு கும்பல் கொல்கிறது.

கொலையாளிகளை பிடிக்க சி.பி.ஐ. அதிகாரி சக்கரவர்த்தி வருகிறார். விசாரணையில் போலீஸ் உதவியுடன் கடத்தல், கொலைகளில் ரவுடி கும்பல் ஈடுபடுவது தெரிகிறது. அவர்களை கையும் களவுமாய் பிடித்து எப்படி கூண்டோடு அழிக்கிறார் என்பது கிளைமாக்ஸ்.

ரவுடி கும்பலுக்கும் சி.பி.ஐ. அதிகாரிக்குமான மோதல்களை விறுவிறுப்பாக காட்சிபடுத்தியுள்ளார் இயக்குனர் புருஷோத்தமன். சி.பி.ஐ. அதிகாரி வேடத்தில் கச்சிதமாய் பொருந்துகிறார் சக்கரவர்த்தி. எம்.ஜி.ஆரை நினைவூட்டும் அவரது மிடுக்கான தோற்றம் கதைக்கு பிளஸ். வில்லன்களுடன் மோதும் சண்டையில் அனல் பறத்துகிறார்.


உதவி பெண் அதிகாரிகளாக வரும் அமிதா, பிரியங்கா, துப்புதுலக்கும் பணி எதுவும் செய்யாமல் கவர்ச்சிக்கு மட்டும் பயன்படுகிறார்கள். வில்லன்களாக வரும் அண்ணன், தம்பிகள் சிங் கார்த்திக், ராக் மிரட்டுகின்றனர். கஞ்சா விற்கும் பெண் அன்பு ராணி, இன்ஸ்பெக்டர் சேது கேரக்டர்களும் கச்சிதம்.

திரைக்கதையை இன்னும் வலுவாக செதுக்கி இருக்கலாம். போலீசை ஓடவிட்டே நிறைய சீன்களை நகர்த்துவது சலிப்பு. வி.தஷியின் பின்னணி இசை பெரிய பலம். பாடல்களும் தாளம் போட வைக்கிறது. ஜி.கனகராஜ் ஒளிப்பதிவு குற்றாலம் அழகை அள்ளுகிறது.
Key word:விமர்சனம் - சக்கரவர்த்தி திருமகன்.

Sunday, 4 November 2012

பீட்சா சினிமா விமர்சனம்


விஜய் சேதுபதி பீட்சா கடையில் வேலை செய்பவர். அவர் காதலி ரம்யா நம்பீசனோடு சேர்ந்து வாழ்கிறார். இதில் ரம்யா கர்ப்பமாகிவிட கல்யாணம் செய்து கொள்கிறார். மென்மையான காதலுடன் நெருக்கமாக போகும் வாழ்க்கையில் திடீர் திருப்பம் இது விஜய் சேதுபதி பீட்சா டெலிவரி செய்ய போகும் பூஜாவின் வீட்டில் இருந்து ஆரம்பிக்கிறது.


படம் முடியும் வரை படத்தின் திரைக்கதையிலும், உருவாக்கத்திலும் ஒரு கணம் கூட சுவாரஸ்யம் குறையாமல் ரசிகர்களை படத்துடன் ஒன்ற வைத்து விடுகிறார்கள். மைக்கேலாக வரும் விஜய் சேதுபதி ஆரவாரம் இல்லாமல் வளர்ந்து வரும் பெரிய நடிகர் என்பதை இந்த படத்திலும் நிரூபித்திருக்கிறார்.

அந்த வீட்டில் இவர் மாட்டிக் கொண்ட அரைமணி நேரமும் தனி ஆளாக இருந்தே நடிப்பில் பட்டையை கிளப்புகிறார். அனுவாக வரும் ரம்யா நம்பீசன் முதலில் வரும் காதல் காட்சிகளில் இயல்பாக தோன்றி, காட்சியில் ஒன்ற செய்கிறார். படத்தில் வரும் சின்னச்சின்ன கதாபாத்திரங்கள் எல்லாமே சுவாரஸ்யமாக இருக்கின்றன. குறிப்பாக வீர சந்தானம், நரேன், ஜெயக்குமார் அனைவருமே கதாபாத்திரத்தை பிரதிபலிக்கிறார்கள்.


படத்தின் மிகப் பெரிய பலம் அதன் தொழில் நுட்ப கலைஞர்கள்தான். ஒளிப்பதிவாளர் கோபி அமர்நாத். படத்தில் இவரும் ஒரு ஹீரோ என்றே சொல்ல வேண்டும். ஒரு வீட்டுக்குள் டார்ச் லைட், மெழுகுவர்த்தியை வைத்தே ஒளிப்பதிவில் வித்தை காட்டியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசை. எங்கு தேவையோ அங்கு மட்டும் அதை தந்து படத்திற்குள் ரசிகர்களைக் கொண்டு போகிறார். முதலில் அறிமுகமான "அட்டை கத்தி"யை அவரே மிஞ்சி இருக்கிறார். படம் கச்சிதமாக வந்ததற்கு இன்னொரு காரணம் எடிட்டர் லியோ ஜான்பால்.

படத்தின் முடிவில் வரும் மாண்டேஜ் ரசனையான ஐடியா. ஒளிப்பதிவு, இசை, எடிட்டங், இயக்கம் அனைத்தும் ஒன்றோடு ஒன்று கலந்த ரசனையான அனுபவத்தை தருகிறது. எழுதி, இயக்கியிருப்பவர் கார்த்திக் சுப்புராஜ். ஏற்கனவே குறும்படங்களில் பெயரெடுத்தவர். இப்போது முதல் படத்திலேயே எந்த தடுமாற்றமும் இல்லாமல் தெளிவான திரைக்கதை. கதைக்கு என்ன தேவையோ அதை மட்டும் எடுத்து சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார்.

முன் பகுதி சிறிது நேரம் மெதுவாக நகர்ந்தாலும் பின் பகுதியின் வேகம் அதை மறக்கச் செய்கிறது. இவ்வளவு நல்ல திரைக்கதையோடு ஒரு சினிமா வந்து எவ்வளவு நாளாகிறது?... என்று கேட்க வைக்கும் "பீட்சா"வுக்கு கிடைத்திருப்பது 'பாஸ்' மார்க்.

Saturday, 3 November 2012

கல்லணை-சுற்றுலா.


தமிழகத்தில் உள்ள பழமையான அணைகளுள் முக்கியமானது கல்லணை ஆகும். இது திருச்சிக்கு அருகே காவிரி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ளது. இந்த அணை சோழ மன்னன் கரிகாலனால்

Thursday, 1 November 2012

இயற்கை எழில் கொஞ்சும் குட்டி மேகமலை மூணார்!!!!






தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1500 மீட்டர் உயரத்தில் மேகமலை வனஉயிரிண சரணாலயம் அமைந்துள்ளது.

இந்த மேகமலை வருவாய் கிராமத்தில் ஹைவேவிஸ் பேரூராட்சி அமைந்துள்ளது. இந்த பேரூராட்சியில் ஹைவேவிஸ் மணலார், மேல் மணலார், வெண்ணியாறு, இரவங்களாறு, மகாராஜா மெட்டு உள்ளிட சுற்றுலா
இடங்கள் அமைந்துள்ளன. குட்டிமூணார் என்று அழைக்கப்படும் ஹைவேவிஸ் மலையின் இயற்கை அழகை ரசிக்க நாளுக்கு நாள் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது.

இப்பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்கள் பச்சைபசேல் என விழிகளுக்கு பசுமை விருந்து படைத்து வருகின்றன. ஹைவேவிஸ் செல்லும் வழியில் ஆங்காங்கே கட்டப்பட்டுள்ள தடுப்பு அணைகளில் தண்ணீர் தேங்கி நிற்கும் காட்சிகள், மனதையும் கண்களையும் ஒருசேர குளிர வைத்து வருகின்றன. கடந்த சில நாட்களாக இங்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.
 சுற்றுலா பயணிகளுக்கு போதிய உணவு விடுதி ஓட்டல்கள் வசதி இல்லை. இதனால், அவர்கள் வரும் வழியில் சின்னமனூரில் இருந்து உணவுகள் வாங்கிக்கொண்டு சுற்றுலா செல்கின்றனர்.
Key word: குட்டி மூணார்,சுற்றுலாத் தலங்கள்.

Tuesday, 30 October 2012

யார் பிரியாணி?


வெங்கட்பிரபுவின் பிரியாணி படத்தில் ஹீரோயின் யார் என்பதில் ஏற்பட்ட மோதலில் ரிச்சா கங்கோபாத்யாய் வெளியேறினார். வெங்கட்பிரபு  இயக்கும் படம் ‘பிரியாணி. கார்த்தி ஹீரோ. இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க முதலில் ரிச்சா கங்கோபாத்யாயிடம் வெங்கட் பிரபு பேசி வந்தார். ஆனால்  அவரை ஒப்பந்தம் செய்யாமல் காலம் கடத்தி வந்தார். இந்தநிலையில் வேறு ஹீரோயின்களுடனும் வெங்கட் பிரபு பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். சமீபத்தில்  ஹன்சிகாவிடம் கதை சொன்னார். அவருக்கு பிடித்துவிடவே நடிக்க ஒப்புக்கொண்டார். மற்றொரு ஹீரோயினாக ரிச்சா நடிப்பார் என்று தகவல் வெளியானது.  ஆனால் இதை அவர் ஏற்கவில்லை.

இதையடுத்து ஹீரோயின் யார் என்பதை முடிவு செய்யும்படி இயக்குனரிடம் வாக்குவாதம் செய்தாராம். அவரை இயக்குனர் சமாதானம் செய்தார். ‘படத்தில் 2  ஹீரோயின்கள் இருப்பதால் உங்களது கதாபாத்திரம் சற்று மாற்றங்களுடன் இடம்பெறுகிறது என்று விளக்கினார். ஆனால் அதை ரிச்சா ஏற்கவில்லை.  இதையடுத்து படத்திலிருந்து வெளியேற முடிவு செய்தார். இதுபற்றி தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள ரிச்சா, ‘என்னுடைய கதாபாத்திரத்தில் மாற்றம்  செய்யப்பட்டிருப்பதை ஏற்க முடியவில்லை. எனவே படத்திலிருந்து வெளியேறிவிட்டேன் என்று தெரிவித்துள்ளார். அதே நேரம், சம்பள பிரச்னையால்தான் ரிச்சா  விலகியிருப்பதாகவும் கூறப்படுகிறது. படத்தில் மற்றொரு ஹீரோயினாக நீது சந்திரா நடிப்பார் என தெரிகிறது.

Monday, 29 October 2012

'நான் ஈ' பட நடிகர் நானி திருமணம்


பிரபல தெலுங்கு நடிகர் நானி. இவர் ‘வெப்பம்‘ படம் மூலம் தமிழில் அறிமுகமானார். தமிழ், தெலுங்கில் தயாரான ‘நான் ஈ’ படத்திலும் நடித்தார். இப்படம் வெற்றிகரமாக ஓடியது.

நானியும், விசாகபட்டினத்தை சேர்ந்த அஞ்சனாவும் 5 ஆண்டுகளாக காதலித்தனர். திருமணம் செய்து கொள்ளவும் விரும்பினர். திருமணத்துக்கு இரு வீட்டு பெற்றோரும் சம்மதித்தார்கள். இதை தொடர்ந்து நானி, அஞ்சனா திருமணம் விசாகபட்டினத்தில் நடந்தது. நடிகர், நடிகைகள் நேரில் வாழ்த்தினார்கள். ஐதராபாத்தில் திருமண வரவேற்பு நடக்கிற

Thursday, 25 October 2012

சினிமாவில் மீண்டும் மீனா!


தமிழ் ரசிகர்களை அழகால் வசிகரித்தவர் மீனா. முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாய் நடித்தார். தெலுங்கு, கன்னட, மலையாள மொழி படங்களிலும் கலக்கினார்.

2009-ல் வித்யாசாகர் என்ற சாப்ட்வேர் என்ஜினீயரை மணந்து சினிமாவுக்கு முழுக்கு போட்டு ஒதுங்கினார். கடந்த வருடம் அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு நைனி

Tuesday, 23 October 2012

திருப்பூர் மாவட்டம் பஞ்சலிங்க அருவி.

உடுமலை:
 திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த திருமூர்த்திமலையில் அமணலிங்கேஸ்வரர் கோயில், பஞ்சலிங்க அருவி, திருமூர்த்தி அணை, மீன் காட்சியகம் ஆகியவை உள்ளன. இவற்றை காண தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ தினங்களில் அமணலிங்கேஸ்வரர் கோயிலுக்கு பக்தர்கள் அதிகளவில் வருவார்கள்.
Tag:பஞ்சலிங்க அருவி.

Sunday, 21 October 2012

சுஷ்மிதாசென் திருமணம் !!!!!!!!!!!


முன்னாள் பிரபஞ்ச அழகியும், இந்திய நடிகையுமான சுஷ்மிதா சென்னுக்கு தற்போது 36 வயதாகிறது. இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. எனினும் ரெனீ, அலிஷா என்ற இரண்டு பெண் குழந்தைகளை தத்து எடுத்து வளர்த்து வருகிறார்.
இதுவரை திருமணம் பற்றி வெளிப்படையாக பேசாத சுஷ்மிதாசென் தற்போது தனது திருமணம் பற்றி சீரியசாக பேச தொடங்கி உள்ளார்

Sunday, 14 October 2012

விஸ்வரூபம்’ பாடல் வெளியீட்டு விழா-நவம்பர் மாதம் 7$$


உலக நாயகன் கமலஹாசன் கதாநாயகனாக நடித்ததுடன், கதை, இணை தயாரிப்பு மற்றும் இயக்குனராக பணியாற்றிய ‘விஸ்வரூபம்’ திரைப்படம், தமிழ், தெலுங்கு, இந்தி, ஆகிய 3 மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டது.

இந்த படத்தின் காட்சிகள் பெரும்பாலும் அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளன. சில காட்சிகள் சென்னை, மும்பையில் எடுக்கப்பட்டன.

இந்திய திரையுலகின் முதல் முயற்சியாக ‘அவ்ரோ 3டி’ என்ற நவீன ஒலி தொழில்நுட்பத்தில் விஸ்வரூபம் திரையிடப்பட உள்ளது. சங்கர் எசான்லாய் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்களை தமிழில் கவிஞர் வைரமுத்துவும் இந்தியில் ஜாவீத் அக்தரும் எழுதியுள்ளனர்.

‘விஸ்வரூபம்’ பாடல் வெளியீட்டு விழா, கமலஹாசனின் 58-வது பிறந்த நாளான வருகிற நவம்பர் மாதம் 7-ந்தேதி நடைபெற உள்ளது. சென்னை, மதுரை, கோவை ஆகிய 3 நகரங்களில் ஒரே நாளில் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெறுகிறது. 3 நகரங்களிலும் ஒரேநாளில் கமலஹாசன் சென்று விழாவில் பங்கேற்று சி.டி.க்களை வெளியிடுகிறார்.

கமலஹாசனின் பிறந்த நாளும் ‘விஸ்வரூபம்’ பாடல் வெளியீட்டு விழாவும் தமிழ்நாட்டின் 3 நகரங்களில் ஒரே நாளில் நடைபெறுவதால், விழாக்களை கோலாகலமாக நடத்த அவரது ரசிகர்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

Saturday, 13 October 2012

மாற்றான் விமர்சனம்.

சூர்யாவின் அப்பா ஒரு ஆராய்ச்சியாளர். அவர் தனது மனைவிக்கு டெஸ்ட் டியூப் குழந்தை பிறக்கச் செய்கிறார். அது இரட்டைக் குழந்தையாக ஒட்டிப்பிறக்கிறது. ஒரு குழந்தை இதயத்துடனும், மற்றொரு குழந்தை இதயம் இல்லாமலும் இருக்கிறது. இதயத்துடன் இருக்கும் குழந்தை விமலன். மற்றொரு குழந்தை அகிலன். இதில் ஒரு குழந்தையை பிரித்து எடுத்து விடுங்கள் என்று டாக்டர்கள் சொல்ல, அவரது மனைவி மறுக்கிறார். இதனால் இருவரும் ஒட்டியே வளர்கிறார்கள்.

ஒருகாலக்கட்டத்தில் கஷ்டத்தில் இருந்த சூர்யாவின் தந்தை பால் பவுடர் ஒன்றை தயாரித்து உலகம் முழுவதும் விற்பனை செய்து பெரிய கோடீஸ்வரரர் ஆகிறார். இவர் தயாரிக்கும் பால் பவுடரில் ஊக்க மருந்து கலக்கப்படுவதாக அறிந்த இக்வேனியா பெண்மணி ஆராய்ச்சி செய்ய சூர்யாவின் தந்தை நிறுவனத்திற்கு வருகிறார். இவருக்கு தமிழ் மொழி பெயர்ப்பாளராக காஜல் அகர்வால் வருகிறார். இங்கு சூர்யாவை சந்திக்கும் இவர் காதல் வயப்படுகிறார்.

சூர்யாவின் தந்தையின் நிறுவனத்தில் இக்வேனியா பெண்மணி சில படங்களை எடுத்து பென்டிரைவில் பதிவு செய்து வைக்கிறார். இதையறிந்த சூர்யாவின் தந்தை அந்த பெண்ணை கொலை செய்து விடுகிறார். இறப்பதற்கு முன்பு அந்த பென்டிரைவை விழுங்கி விடுகிறார்.

இதனை கைப்பற்ற சூர்யாவின் தந்தை முயற்சிக்கிறார். ஆனால் பென்டிரைவ் சூர்யாவின் கைக்கு கிடைக்கிறது. சூர்யாவிடம் இருக்கும் பென்டிரைவை கைப்பற்ற ஒரு கும்பல் இரட்டையரான சூர்யாவை தாக்குகிறது. இதில் விமலன் இறக்க நேரிடுகிறது.

உயிரோடு இருக்கும் அகிலன் பென்டிரைவரை வைத்து அதன் பின்னணி என்ன? ஏன் அந்த பெண் கொல்லப்பட்டார் என்பதை கண்டுபிடிப்பதே மீதிக்கதை.

சூர்யாவின் நடிப்பில் இன்னொரு பரிமாணம். அகிலன், விமலன் என ஒட்டி பிறந்த இரட்டையர் வேடத்தில் அசத்தியிருக்கிறார். வெளிநாட்டு பெண்மணிக்கு மொழி பெயர்ப்பாளராக வரும் காஜல் அகர்வால் நன்றாக நடித்திருக்கிறார். சூர்யாவின் அப்பாவாக வரும் சச்சின் கடேகர் விஞ்ஞானி கதாபாத்திரத்தில் மிரட்டியிருக்கிறார்.

சௌந்தர்ராஜன் ஒளிப்பதிவில் பிரம்மாண்டம். பாடல் காட்சிகளை அழகாக படம் பிடித்திருக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், ஒரு பாடல் அருமை. மற்ற பாடல்கள் பரவாயில்லை.

சண்டைக்காட்சிகளை பீட்டர் ஹெய்ன் பிரம்மாதமாக செய்திருக்கிறார். ஒட்டிப் பிறந்த சூர்யாவின் சண்டைக்காட்சிகள் அருமை.

Saturday, 6 October 2012

சமையல் காஸ் விலை இன்று உயர்ந்தது


      சமீபத்திய அந்நிய முதலீட்டு விவகாரம், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளால் எதிர்கட்சியினர் போராட்டம் முடித்து சற்று தணிந்துள்ள இந்ரேந்தில் மக்களை நேரடியாக பாதிக்கும் வகையில் சமையல் காஸ் விலையை மத்திய அரசு இன்று உயர்த்தியுள்ளது. ஏற்கனவே சமையல் காஸ்சுக்கு, ரேசன்(6 சிலிண்டர் குறைப்பு) கொண்டு வந்ததை அடுத்து இன்றைய விலை உயர்வு இல்லத்தரசிகளை

Saturday, 29 September 2012

விமர்சனம்-தாண்டவம்


பார்வையில்லாமல் தானே ஒரு ஒலியை எழுப்பி அதை செவி மூலம் கேட்டு செவிகளை கண்ணாக பயன்படுத்தும் திறன் உடையவர் விக்ரம். சாலையோரம் நின்றிருக்கும் இவரை டாக்சி டிரைவரான சந்தானம் காரில் ஏற்றிச் செல்கிறார். ஒரு இடத்தில் இறக்கிவிட்டு அவருக்காக சந்தானம் காத்திருக்கிறார்

Sunday, 23 September 2012

அஜித், நாகார்ஜுனா படங்களில் மீண்டும் நயன்தாரா தீவிரம்.


நடிகை நயன்தாரா மீண்டும் நடிக்க வந்துள்ளார். நாகார்ஜுனா, ஜோடியாக தெலுங்கு படத்திலும் அஜீத் ஜோடியாக தமிழ் படமொன்றிலும் நடிக்கிறார். தெலுங்கு படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது.

Saturday, 22 September 2012

அமெரிக்காவுக்கு குழந்தையுடன் சென்ற ஐஸ்வர்ய


ஐஸ்வர்யாராய், அபிஷேக் பச்சன் தம்பதிக்கு பிறந்த பெண் குழந்தைக்கு ஆரத்யா என பெயரிட்டுள்ளனர். இக்குழந்தையை பத்திரிக்கையாளர்கள் போட்டோ எடுக்க இதுவரை அனுமதிக்கப்படவில்லை. பொது இடங்களில் குழந்தை முகத்தை முடியே கொண்டு

Friday, 21 September 2012

சாட்டை-சினிமா-விமர்சனம்.


தங்கள் கடமையை மறந்து கண்ணியம் தவறும் ஆசிரியர்களுக்கும். பிள்ளைகளை சரிவர புரிந்து கொள்ளாத பெற்றோருக்கும் கொடுக்கப்படும் அடியே சாட்டை.

நெய்வேலி அருகே உள்ள கிராமத்து அரசு பள்ளியின் உதவி தலைமை ஆசிரியராக தம்பி ராமையா. இப்பள்ளியில் எப்படியாவது தலைமையாசிரியராக வேண்டும் என்ற நினைப்புடன் இருந்து வருகிறார்.

ஆசிரியர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் எதையும் சரியாக செய்ய முடியாத தலைமையாசிரியர் ஜூனியர் பாலையா, இதனால் வகுப்புகளை கட் அடிக்கும் ஆசியர்கள், மாணவர்களால் மாவட்டத்திலேயே பின்தங்கிய நிலையில் இருக்கிறது அந்த பள்ளி.

இந்நிலையில், இயற்பியல் ஆசிரியராக வரும் சமுத்திரகனி, இந்த பள்ளியின் நிலையை கண்டு வியப்படைகிறார். பள்ளியில் இருக்கும் ஒவ்வொரு சட்டங்களையும் மாற்றுகிறார். மாணவர்களை அடித்து திருத்துவதைவிட அன்பாக நான்கு வார்த்தை பேசினாலே நல்வழிக்கு கொண்டு வந்துவிடலாம் என்ற புது பார்முலாவை கடைபிடிக்கிறார். இது அவருக்கு கைகொடுக்கிறது.

இதனால், அப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் சமுத்திரகனியை பிடித்துப் போய்விடுகிறது. இது மற்ற ஆசிரியர்களுக்கு பொறாமையாக இருக்கிறது. தம்பி ராமையாவுக்கும் சமுத்திரகனியின் நடவடிக்கை மேல் அதிருப்தி ஏற்படுகிறது. எனவே, அவரை பள்ளியில் இருந்து விரட்டவும், கொலை செய்யவும் திட்டம் தீட்டுகிறார்.

இதேவேளையில், 12-ம் வகுப்பு படிக்கும் நாயகன் யுவன், அதே வகுப்பில் படிக்கும் நாயகி மகிமாவுக்கு தன்னை காதலிக்குமாறு தொல்லை கொடுத்து வருகிறான். இதை மகிமா சமுத்திரகனியிடம் சொல்கிறாள். அவரும் அவளுக்கு ஆறுதல் சொல்லி அனுப்புகிறாள். அடுத்தநாள் மகிமா விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்ய, அவளை காப்பாற்றி ஆஸ்பத்திரியில் சேர்க்கின்றனர்.

அவள் விஷம் குடித்ததற்கான காரணம் வேறென்றாலும், சமுத்திரகனிதான் காரணம் என சந்தேகத்தில் மகிமாவின் உறவினர்கள் அவரை அடித்து உதைக்க, இது அவர்மீது பொறாமை கொண்ட மற்ற ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது.

இறுதியில், சமுத்திரகனி தன் மீது விழுந்த இந்த கரையை அழித்தாரா? மாவட்டத்திலேயே பின்தங்கியிருக்கும் பள்ளியை முன்னுக்கு கொண்டு வந்தாரா? யுவன், மகிமாவின் காதல் என்னவாயிற்று? என்கின்ற கேள்விகளுக்கு விடை சொல்கிறது மீதிப்படம்.

ஆசிரியர்கள் எப்படி நடந்து கொள்ளவேண்டும்? என்பதை சமுத்திரகனி, ஆசிரியர் கதாபாத்திரத்தில் மிகவும் நேர்த்தியாக செய்திருக்கிறார். நிதானமான அளவான நடிப்பு. மாணவர்களுக்கு சமுத்திரகனி சொல்லும் பல விஷயங்கள், மாணவர்களை படிக்க வைப்பதில் ஆசிரியர்களுக்கு உள்ள சிரமத்தை குறைக்கும்.

உதவி தலைமை ஆசிரியராக வரும் தம்பி ராமையா, திறமையான தனது நடிப்பில் பளிச்சிடுகிறார். தன் வழுக்கை தலைமுடியை எடுத்து வேர்வையை துடைப்பதாகட்டும், சமுத்திரகனியை பார்த்தாலே மனதுக்குள் கொழுந்துவிட்டெரியும் வில்லத்தனத்திலும் சபாஷ் போட வைக்கிறார். இவர் தட்டும் கைதட்டலுக்கு திரையரங்கம் முழுவதும் இவருக்கு கைதட்டலை வாரி இறைத்திருக்கிறது.

தலைமை ஆசிரியராக ஜூனியர் பாலையா. நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்தாலும், அவரது திறமையான நடிப்பால் சிறப்பான ஆசிரியர் என்பதை நம் மனதில் பதிய வைத்திருக்கிறார்.

படத்தில் பெரும் பகுதி ரசிகர்களின் கோபத்தை தூண்டும் விதத்திலேயே நாயகன் யுவனின் நடிப்பு அமைந்துள்ளது. இறுதியில், நல்லவனாக மாறும் இவர், ரசிகர்களிடம் நெருங்குகிறார்.

நாயகி புதுமுகம் மகிமா, தமிழ் சினிமாவுக்கு அழகான கதாநாயகி கிடைத்திருக்கிறார். காதல், கோபம் என்று முகத்தில் பலவித பாவனைகள் இவருக்கு சர்வசாதரணமாக வருகிறது.

இசையமைப்பாளர் டி.இமான் தான் ஒரு மெலோடி கிங் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். அந்த அளவுக்கு ரொம்ப அழகான மொலோடி மெட்டுக்களை கொடுத்திருக்கிறார். ‘சகாயனே சகாயனே’ ‘அடி போடி ராங்கி’ போன்ற பாடல்கள் காதுகளுக்கு இனிமையை தருகின்றன.

அரசு பள்ளிக்கூடங்களில் இருக்கும் ஆசிரியர்கள் எப்படி இருக்க வேண்டும், தனியார் பள்ளிகளின் தற்போதைய நிலை என்னவென்பதை மிக அழுத்தமாக சொல்லியிருக்கும் இயக்குநர் அன்பழகன், தனது முதல் படத்திலேயே இப்படி ஒரு கருத்தை சொல்லியதற்கு ரசிகர்களிடம் பலத்த பாராட்டைப் பெற்றுவிடுகிறார்.

மொத்தத்தில் ‘சாட்டை’ சுழற்றிய விதம் மிகவும் அருமை.
TAG:சினிமா- விமர்சனம்.

Wednesday, 19 September 2012

துள்ளி எழுந்தது காதல் -விமர்சனம்.


ராஜாவுக்கு உடன் படிக்கும் ஹரிப்பிரியா மீது கண்டதும் காதல். ஹரிப்பிரியாவுக்கும் ராஜா மீது காதல். இருவரும் காதலை சொல்லாமல் பழகுகிறார்கள். ஒரு முறை நண்பர்கள் இணைந்து பெங்களூருக்கு டூர் செல்லும்போது ராஜாவும், ஹரிப்பிரியாவும் ஓர் இரவை தனியாக கழிக்க வேண்டிய

எதிர்கால சந்ததிக்காக ஒரு பிசினஸ்!


வரகு, திணை, சாமை, கம்பு, சோளம், சிவப்பரிசி, கைக்குத்தல் அரிசி... பறித்த பசுமை மாறாத கீரை வகைகள்... உயிர்ப்போடு ஃப்ரெஷ்ஷாக இருக்கும் காய்கறிகள்... கலப்படம் கொஞ்சமும் இல்லாத உணவு வகைகள்... எங்கே கிடைக்கும்? சென்னை அடையாறில் இருக்கும் ரீஸ்டோரில் கிடைக்கும்! இங்கே முதலாளியும் இல்லை... தொழிலாளியும் இல்லை எல்லோருமே தன்னார்வலர்கள் என்பது கூடுதல் ஆச்சரியம்!
       ரீஸ்டோர் வாலண்டியர்களில் ஒருவரான ராதிகா சொல்கிறார்... ‘‘இன்னிக்கு நாம சாப்பிடுற உணவு ஆரோக்கியமானது இல்ல. பயிர்கள்ல உரம், பூச்சி மருந்தை அதிகமாப் போட்டு, விஷமாக்கிடுறாங்க. அதைத்தான் காசு குடுத்து சாப்பிடுறோம். தாத்தா, பாட்டிகள் கடைசி காலம் வரை திடகாத்திரமா இருந்த நிலைமை போய், இன்னிக்கு 15 வயசுலயே டயாபடீஸ் வந்துடுது. காரணம், உணவில் சத்தில்லை. அதோட பாரம்பரிய உணவை மறந்துட்டு வெளிநாட்டு உணவு வகைகளைத் தேடித் தேடி சாப்பிடுறோம்.

இன்னொரு பக்கம், விளைந்த பொருட்களை விற்க முடியாம விவசாயிகள் தவிக்கிறாங்க. இதுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கணும்னு ஆரம்பிக்கப்பட்டதுதான் ‘ரீஸ்டோர்’. பாரம்பரியத்தை மீட்டுக் கொண்டு வர்றதுதான் எங்க நோக்கம். சென்னையைச் சுற்றியுள்ள கிராமங்கள்ல விவசாயிகளிடம் நேரடியா உணவுப் பொருட்களை வாங்கி, விக்கிறோம். சமையலுக்கு தேவைப்படுற அத்தனையும் இங்கே கிடைக்கும்.
         பருப்பு, மாவு, செக்குல ஆட்டின சுத்தமான எண்ணெய், ட்ரைஃப்ரூட்ஸ், அரிசி, சிறு தானியங்கள்னு எல்லாமே இயற்கையா விளைஞ்ச தரமான பொருட்கள்.  ‘பாசுமதி’ பஞ்சாப்ல கிடைக்கிற உயர்ரக அரிசி. நம்ம ஊர் சீரக சம்பா அரிசிக்குப் பக்கத்தில கூட அது வரமுடியாது. சீரக சம்பாவுல அவ்வளவு சத்து இருக்கு. இதையெல்லாம் வாடிக்கையாளர்களுக்கு புரிய வைக்கிறோம். வரகு, திணை, கம்பு விளையுற இடங்கள், அதிலுள்ள சத்துகள் பற்றி புத்தகம் வெளியிட்டிருக்கோம். இன்னிக்கு தேன்ல கூட கலப்படம்! நாங்க விக்கறது இயற்கையா கிடைக்கிற தேன்!
         பண்டிகை நாட்கள்ல பாரம்பரிய உணவுகளை தயார் செஞ்சு கொடுக்குறோம். மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரிக்கிற மூலிகை சோப், ஷாம்பு, குளியல் பவுடர் கூட இங்கே இருக்கு. ஊறுகாய், இன்ஸ்டன்ட் பவுடர், இயற்கை உரத்துல விளைவிக்கப்பட்ட பழங்கள், காய்கறிகள், கீரைகளும் கிடைக்கும். முதலாளி, தொழிலாளி பாகுபாடு இல்லாம ரீஸ்டோரை ஆரம்பிச்சோம். எல்லாருமே தன்னார்வலர்கள்தான். சம்பாதிக்கறது எங்க நோக்கமில்ல. அடுத்த சந்ததியினர் ஆரோக்கியமா இருக்கணும்... அவ்வளவுதான்.
வாரத்துல ரெண்டு நாள், செவ்வாய்க்கிழமை மதியம் ரெண்டு மணியில இருந்தும், சனிக்கிழமை சாயங்காலம் நாலு மணியில இருந்தும் காய்கறிகள், பழங்களுக்கான பஜார் நடக்கும். காய்கறி வாங்க வெறும் கையோட யாரும் இங்கே வர முடியாது. பிளாஸ்டிக் கவருக்கு தடை போட்டிருக்கோம்.
இது எங்களோட முதல் முயற்சி. அடுத்தக்கட்டமா வாடிக்கையாளர்களுக்கு காய்கறிகள் உற்பத்தி பண்ணுற வித்தையை கத்துத் தரப்
போறோம். அழகுக்காக குரோட்டன்ஸ் செடிகளை வளர்க்கறதை விட்டுட்டு மொட்டை மாடியில சின்னதா தோட்டம் போட்டா கீரைகள், காய்கறிகள் கிடைக்கும். அதுக்காகத்தான் ‘ரீஸ்டோர் கார்டன்’ அமைப்பை உருவாக்கியிருக்கோம்.
எங்களைப் பார்த்து மற்றவர்களும் இந்த முயற்சியை செஞ்சா அது எங்களுக்குக் கிடைத்த வெற்றி. சூப்பர் மார்க்கெட்ல ஃப்ரீசர்ல வச்சிருக்குற உணவை வாங்கி உடம்பை கெடுத்துக்குறதை விட்டுட்டு, நாம உற்பத்தி செஞ்ச காய்கறிகள்ல சமைச்சு, மிச்சமிருக்குற நாட்களை ஆரோக்கியமா வச்சுக்க எல்லாரும் முன்வரணும். பாரம்பரிய தானியங்கள்ல இருக்குற சத்துகளையும் மகத்துவத்தையும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு போயே ஆகணும்’’ என்கிறார் ராதிகா.

விநாயகர் சதுர்த்தி விழாவில் திரிஷா, பிரியாமணி


நடிகர், நடிகைகள் வீடுகளிலும், படப்பிடிப்பு தளங்களிலும் விநாயகர் சதுர்த்தியை இன்று கொண்டாடினர். விநாயகர் சிலைக்கு பூஜை செய்து வழிபட்டார்கள். இனிப்பு பண்டங்கள் செய்தும் சாப்பிட்டனர்.

பிரியாமணி கூறும்போது,

சிங்கம்-2 படத்தில் இரு நாயகிகள்: அனுஷ்காவுடன் நடிக்க ஹன்சிகா தயக்கம்


நடிகர் சூர்யா நடித்த ஹிட்டான படம் சிங்கம். இதில் ஜோடியாக அனுஷ்கா நடித்தார். ஹரி இயக்கினார். இப்படத்தின் இரண்டாம் பாகம் ‘சிங்கம்-2’

Tuesday, 18 September 2012

அதிகம் அறியப்படாத பரளிக்காடு-சுற்றுலா.


கோவை:
 கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் இருக்கிறது காரமடை. அங்கிருந்து கிளை பிரியும் தோலாம்பாளையம் சாலையில் சென்றால் சுமார் 30 கிலோமீட்டர் பசுஞ்சாலைப் பயணத்திற்குப் பின் பில்லூர் அணைக்கட்டைச் சென்றடையலாம்.
முன் பதிவு:
குறுகலான மலைப்பாதையில் பயணித்தால் அணைக்கட்டை ஒட்டி இருக்கும் பரளிக்காடு எனும் மலையோர கிராமத்தை

பிரகாஷ்ராஜ்,மனைவி பிறந்த நாளை தாஜ்மகாலில் கொண்டாடினார்.


பிரகாஷ்ராஜ் தமிழ், இந்தி, தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வருகிறார். ராதாமோகன் இயக்கும் ‘கவுரவம்’ படத்தை தமிழ், தெலுங்கில் தயாரித்து வருகிறார்.

இந்தி நடன இயக்குனர் போனி வர்மாவை சில வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். சினிமாவில் பிசியாக இருந்ததால் இருவரும் சேர்ந்து வெளியே செல்வது அரிதாக இருந்தது.




இந்த நிலையில் போனி வர்மா பிறந்தநாளையொட்டி அவரை தாஜ்மகாலுக்கு அழைத்து சென்று பிரகாஷ்ராஜ் சந்தோஷப்படுத்தினார். இருவரும் தாஜ்மகால் முன் நின்று போட்டோவும் எடுத்துக் கொண்டனர். இது எனக்கு மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது என்று போனி வர்மா கூறினர்.

இந்த ஆண்டில் இதுவரை 104 படங்கள் ரிலீஸ்: வசூல் ஈட்டிய 'டாப் 10' படங்கள்


இந்த ஆண்டு தமிழில் கடந்த ஆகஸ்டு மாதம் வரை 'முகமூடி'யை சேர்த்து 100 படங்கள் வரை வந்தன. தொடர்ந்து இம்மாதம் 'மன்னாரு', 'சுந்தரபாண்டியன்', 'பாகன்', படங்கள் வந்துள்ளன. இதில் உதயநிதி ஸ்டாலின் நடித்த 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படம் 150 நாட்களை தாண்டி ஓடி பெரும் தொகை லாபம் ஈட்டியுள்ளது.

தெலுங்கு, தமிழ் ஆகிய இரு மொழிகளில் வந்த 'நான் ஈ' படம் தமிழகத்தில் மட்டும் ரூ. 15 கோடிக்கு மேல் வசூல் பார்த்துள்ளது. தெலுங்கில் ரூ.75 கோடி ஈட்டியுள்ளது. இந்த படம் ரூ. 40 கோடி செலவில் எடுக்கப்பட்டது. வசூல் ரூ.100 கோடியை தாண்டும் என்கின்றனர்.

லிங்குசாமி இயக்கத்தில் வந்த 'வேட்டை' படமும் லாபம் சம்பாதித்தது. இதில் ஆர்யா, மாதவன், அமலாபால், சமீரா ரெட்டி இணைந்து நடித்து இருந்தனர், இந்த படத்தை இந்தியிலும் ரீமேக் செய்திருந்தார்கள்.

விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் நடித்த 'நண்பன்' படமும் வசூல் பார்த்தது. ஷங்கர் இயக்கியிருந்தார். ரூ. 1 கோடி செலவில் எடுத்த 'மெரீனா' படம் ரூ. 3 கோடி லாபம் சம்பாதித்தது. 'அம்புலி 3டி' படமும் ரூ. 4 கோடி வசூல் ஈட்டியது. இதனை ரூ. 2 கோடி செலவில் எடுத்து இருந்தனர்.

'கலகலப்பு', 'காதலில் சொதப்புவது எப்படி', 'அட்டகத்தி' படங்கள் நன்றாக ஓடின. 'வழக்கு எண் 18/9', 'கழுகு', 'உருமி', 'நான்' படங்களும் பேசப்பட்டன. 'பில்லா 2', 'தோனி', '3', 'சகுனி', 'முகமூடி' படங்கள் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டன. ஆனால் இவற்றில் சில படங்கள் வசூலில் திருப்தி அளிக்கவில்லை என்கின்றனர். பல படங்கள் நஷ்டத்தை சந்தித்து உள்ளன

Saturday, 15 September 2012

நெல்லை சந்திப்பு-விமர்சனம்.


பாசமான குடும்பத்தின் பொறுப்பான மகன் ரோஹித். கல்லூரி முடித்து விட்டு கம்ப்யூட்டர் பயிற்சி பெறுகிறார். தீவிரவாதிகள் நாட்டுக்குள் புகுந்தால் போலீசுக்கு தெரியப்படுத்தும் சாப்ட்வேரை கண்டுபிடிக்கிறார். ஆனால் அவரையே தீவிரவாதியாக்குகிறது போலீஸ். பக்கத்துவீட்டில் ஒரு பெண் பாலியல் தொழில் செய்வதால் வீட்டை காலி செய்து விட்டு வேறொரு வீட்டுக்கு

<சுந்தரபாண்டியன்>சினிமா விமர்சனம்


<சுந்தரபாண்டியன்>சினிமா விமர்சனம்

‘சுப்பிரமணியபுரம்’, ‘நாடோடிகள்’ படவரிசையில் நண்பர்களுக்காக எதுவும் செய்யத் துணியும் ஹீரோவின் கதைதான் ‘சுந்தரபாண்டியன்’. நண்பனின் காதலுக்காக தான் ஏற்கனவே பின்னால் சுற்றிய ஹீரோயின் லட்சுமி மேனனிடம் தூது போகிறார் சசிகுமார். போன இடத்தில் லட்சுமி மேனன் சசிகுமாரை இப்போது விரும்புவதாக கூறுகிறாள். சசிகுமாரும் அவரது காதலை ஏற்றுக் கொள்கிறார்.

இன்னொரு பக்கம் அப்புக்குட்டி லட்சுமிமேனனை ஒருதலையாக காதலித்து வருகிறார். இதனால் அப்புக்குட்டியுடன் ஏற்படும் மோதலில், தவறுதலாக அப்புக்குட்டி இறந்துவிட, கொலைப்பழியை சசிகுமார் ஏற்றுக் கொள்கிறார்.

இந்நிலையில், சசிகுமாரின் காதல் விவகாரம் லட்சுமி மேனனின் வீட்டுக்கு தெரிந்துவிட, அவளது முறைப் பையனான விஜய் சேதுபதிக்கு திருமணம் முடித்துவைக்க ஏற்பாடு நடக்கிறது. ஆனால், லட்சுமி மேனன் முறைப் பையனை மணமுடிக்க எதிர்ப்பு தெரிவிக்கிறார்.

சசிகுமாரின் ஆழமான காதலை புரிந்து கொண்ட லட்சுமி மேனனின் அப்பா இவர்களது காதலுக்கு பச்சைக் கொடி காட்டுகிறார். இதனால் கோபமடைந்த லட்சுமி மேனனின் முறைப்பையனும், இறந்து போன அப்புக்குட்டியின் நண்பனும் சேர்ந்து சசிகுமாரை தீர்த்துக்கட்ட முடிவெடுக்கிறார்கள். இவர்களோடு சசிகுமாரின் நண்பனும் சேர்ந்து கொள்கிறான்.

இவ்வளவையும் சமாளித்து ஹீரோவும் ஹீரோயினும் இணைந்தார்களா என்பதே படத்தின் மீதிக் கதை.



சசிகுமார் இந்தப் படத்தில் பட்டையை கிளப்பி இருக்கிறார். முதல் பாதியில் ‘புரோட்டோ’ சூரியோடு இவர் செய்யும் கலாட்டாக்கள் நம் வயிற்றை பதம் பார்க்கின்றன. ரஜினி ரசிகராக பஸ்சில் இவர் செய்யும் அலப்பறை செம கலகலப்பு.

ஹீரோயின் ‘கும்கி’ லஷ்மி நாயர். பக்கத்து வீட்டு பெண்ணைப் போன்ற அழகு. தமிழ் சினிமாவுக்கு கிராமத்துப் பெண்ணாக, நன்றாக நடிக்கத் தெரிந்த மற்றொரு ஹீரோயின் கிடைத்திருக்கிறார். பஸ்சில் தன் பின்னால் சுற்றும் சசிகுமாரை முறைப்பதில், தன் பார்வையிலே பேசுகிற தொனி அருமை.

படத்தில் இடைவேளை வரை சூரி கலகலப்பூட்டியிருக்கிறார். இடைவேளைக்கு பிறகு திரைக்கதையின் தேவை கருதி இவரின் பங்களிப்பு குறைவாகவே இருக்கிறது.

ஹீரோயின் பின்னாலேயே சுற்றும்  ‘ரோமியோ’வாக அப்புக்குட்டி. இவர் வலிந்து வலிந்து தனது மேனரிசம்களை காட்டி ஹீரோயினை வளைக்க நினைப்பது கலகலப்பூட்டும் காமெடி.

விஜய் சேதுபதிக்கு இப்படத்தில் சாதாரண கதாபாத்திரம் என்றாலும், கதைக்கு பலம் கூட்டும் கதாபாத்திரம். அதை அவர் சிறப்பாக செய்திருக்கிறார்.

சசிகுமாரின் அப்பாவாக வரும் நரேன், ஹீரோயினின் அப்பாவாக வரும் தென்னவன், சசிகுமாரின் நண்பன் இனிகோ பிரபாகரன், அப்புக்குட்டியின் நண்பன் சௌந்தர ராஜா ஆகியோர் தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கின்றனர்.

என்.ஆர்.ரகுநந்தன் இசையில் படத்தின் பாடல்கள் சுமார் ரகம்தான். ஆனால் பின்னணி இசை படத்தை வேகமாக நகர்த்த உதவியிருக்கிறது. கதை நடக்கும் உசிலம்பட்டி ஏரியாவை பிரேம்குமாரின் ஒளிப்பதிவு நேரில் பார்த்தது போன்ற உணர்வை நமக்கு தருகிறது. பஸ்ஸில் பயணம் செய்யும் காட்சிகளிலும், பைக்கில் பயணம் செய்யும் காட்சிகளிலும் ஒளிப்பதிவு அருமை.

படத்தின் ஆரம்பத்திலேயே உசிலம்பட்டி ஏரியா பற்றிய ஒரு சிறு தொகுப்பை ரசிகர்களுக்கு யதார்த்தம் தவறாமல் பதிவு செய்த இயக்குனருக்கு பாராட்டுக்கள். இடைவேளைவரை சினிமாத்தனம் இல்லாமல் கலகலப்பாக கதை நகர்கிறது. ஆனால் இடைவேளைக்குப்பின் அது கொஞ்சம் தலைதூக்குகிறது. இருந்தாலும், முந்தைய படங்களின் சாயல் இல்லாமல் அதனை பதிவு செய்திருந்தால் அருமையாக இருந்திருக்கும்.

மொத்தத்தில் சசிகுமாரை மீட்ட ‘சுந்தரபாண்டியன்’ குடும்பத்துடன் சென்று பார்க்க வேண்டிய படம்.
Key word:<சுந்தரபாண்டியன்> சினிமா விமர்சனம்

காணிக்கை