Saturday, 6 October 2012

சமையல் காஸ் விலை இன்று உயர்ந்தது


      சமீபத்திய அந்நிய முதலீட்டு விவகாரம், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளால் எதிர்கட்சியினர் போராட்டம் முடித்து சற்று தணிந்துள்ள இந்ரேந்தில் மக்களை நேரடியாக பாதிக்கும் வகையில் சமையல் காஸ் விலையை மத்திய அரசு இன்று உயர்த்தியுள்ளது. ஏற்கனவே சமையல் காஸ்சுக்கு, ரேசன்(6 சிலிண்டர் குறைப்பு) கொண்டு வந்ததை அடுத்து இன்றைய விலை உயர்வு இல்லத்தரசிகளை
அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
கடந்த மாதம் அந்நிய முதலீட்டு அனுமதிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் உள்ளிட்ட நாடு முழுவதும் எதிர்கட்சியினர் பந்த் நடத்தினர். டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வர்த்தக நிறுவன அமைப்பினர் அனைவரும் இந்த போராட்டத்தில் குதித்தனர். சில மாநிலங்களில் பாதிப்பும், இயல்பு நிலையும் நிலவியது. டீசல், பெட்ரோல் விலை உயர்வு உள்ளிட்ட விஷயங்களால் அதிருப்தி அடைந்த மம்தா கட்சி மத்திய அரசில் இருந்து விலகியது. ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சாவும் விலகியது.

இந்நிலையில் வீட்டு உபயோகத்திற்கு முக்கிய பொருளான சமையல் காஸ் சிலிண்டருக்கு ரூ. 11. 42 உயர்த்தப்பட்டுள்ளது. சிலிண்டர் டீலர்களுக்கான கமிஷன் தொகையை உயர்த்த வேண்டியிருப்பதால் இந்த முடிவுக்கு வந்திருப்பதாக மத்திய அரசு வட்டாரம் தெரிவிக்கிறது.
ஒரு சிலிண்டர் விலை ரூ. 410.42 பைசா!!
கமிஷன் தொகையில் சிலிண்டருக்கு ரூ. 25.83 பைசாவில் இருந்து ரூ.37.25 பைசாவாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசலுக்கான கமிஷன் தொகையும் முறைப்படி லிட்டருக்கு 23 பைசாவும், 10 பைசாவும் உயர்த்தப்டலாம். இதன் எதிரொலியாக இந்த இரண்டுக்கும் மீண்டும் விலை உயர்த்தப்படும் என்று டில்லி வட்டாரம் தெரிவிக்கிறது. ஏற்கனவே காஸ் ஆண்டுக்கு 6-ஆக குறைத்ததற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ள நிலையில் தற்போது காஸ் ரூ. 399 லிருந்து 410. 42 பைசா ( டில்லியில்) உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் ரூ. 399 ஆகும். இது மக்கள் மத்தியிலும், எதிர்கட்சியினர் மத்தியிலும் ஒரு போராட்டத்தை நடத்த வழிவகுத்துள்ளது.

No comments:

Post a Comment